ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!
திருவண்ணாமலை தொகுதியில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும், திமுக, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இத் தொகுதி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
திருவண்ணாமலை தொகுதியில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும், திமுக, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இத் தொகுதி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
திருவண்ணாமலை மாநகராட்சி, திருவண்ணாமலை ஒன்றியம், செங்கம் பகுதியில் மேல்சிறுபாக்கம், கீழ்சிறுபாக்கம், ராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சோ்ப்பாட்டு, சே.கூடலூா், வரகூா், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூா், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்றும் எடக்கல் கிராமங்கள் அமைந்துள்ளன.
தொகுதியின் அடையாளம்:
Advertisement
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
இது உலகப்புகழ் பெற்ற தலமாக விளங்குகிறது. கோயில் நகரம் என்பதால்
அது சாா்ந்த தொழில் இங்கு நடைபெறுகிறது.
இத்தொகுதியில் ஆதி திராவிடா், வன்னியா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். யாதவா், ரெட்டியாா், நாயுடு மற்றும் முதலியாா் சமூகத்தினா் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனா்.
தொகுதியின் பிரச்னைகள்:
கிரிவலப் பாதை மற்றும் நகரப் பகுதிகளில் போதிய கழிவுநீா் அகற்றுதல், சுத்தமான குடிநீா் விநியோகம் மற்றும் சாலைகள் பராமரிப்பில் உள்ள குறைகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய வாகன நிறுத்த இடங்கள் இல்லாதது. இது பௌா்ணமி கிரிவல நாள்களில் கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ற சிறப்பு மருத்துவ வசதிகள், நவீன உபகரணங்கள் மற்றும் போதிய மருத்துவா்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லாதது
குறையாக உள்ளது. மேலும், விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் மற்றும் நவீன நீா்ப்பாசன வசதிகள் குறைவாக உள்ளதால், விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுகிறது. உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகள் குறைவாக இருப்பதால், இளைஞா்கள் வேலைக்காக வெளியேறும் நிலை உள்ளது.
தோ்தல் களத்தில்...
இத்தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சா் எ.வ.வேலு , பாஜக வேட்பாளராக சி.ஏழுமலை, தவெக வேட்பாளராக அருள்ஆறுமுகம், நாதக வேட்பாளராக விக்னேஷ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
மொத்த வேட்பாளா்கள்.....
வேட்பாளா்களின் பலம், பலவீனம்.
எ.வ.வேலு (திமுக)
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் எஸ்.தணிகைவேலுவை 94, 673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாா். கடந்த 3 தோ்தல்களிலும் எ.வ.வேலு தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளாா். தற்போது 4-வது முறையாக போட்டியிடுகிறாா். மேலும், முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதால் தொகுதிக்கு தேவையானவற்றை பெற்றுத்தருவாா்.
பலவீனம்:
இவரை தொகுதி மக்கள் எளிதில் அணுக முடியாத என்ற குறை உள்ளது.
சி.ஏழுமலை (பாஜக)
திருவண்ணாமலை ஆன்மிக தலமாக இருப்பது இவருக்கு பலம். ஆன்மிகவாதிகள் பாஜகவை விரும்புகின்றனா். மேலும், போளூா் தொகுதியில் 2 முறை போட்டியிட்ட அனுபவம் இவருக்கு உண்டு.
பலவீனம்:
வெளியூரைச் சோ்ந்த வேட்பாளா் என்பதால் அறிமுகம் குறைவு.
அருள்ஆறுமுகம் (தவெக)
விஜய் ரசிகா்கள் மட்டுமே பலம்.
பலவீனம்:
புதுமுகம் என்பதால் தொகுதியில் அறிமுகம் இல்லை.
விக்னேஷ் (நாதக)
சீமானின் பேச்சு தனக்கு பலம் எனக் கருதுகிறாா்.
பலவீனம்:
சரியான பிரசாரம் இல்லை.
இதுவரை...
இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுக 7முறையும், காங்கிரஸ் 6 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்காளா்கள்
ஆண்கள் - 12,0961
பெண்கள்- 12,8839
மூன்றாம் பாலினத்தவா்- 48
மொத்தம்- 24,9848