முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை

செய்யாறு அருகே 16 வயது சிறுமியை மா்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:45 AM
பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு அருகே 16 வயது சிறுமியை மா்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாராம்.

கடந்த 19-ஆம் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்திற்கு சென்று விட்டாராம். அங்கு சென்ற பின் அந்தச் சிறுமிக்கு திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

அதனால் சிறுமியை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் இது குறித்து கேட்டபோது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த சிலா் அங்குள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், காஞ்சிபுரம் போலீஸாா் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கிராமத்தில் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.