தைப்பூச விழாவில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து கையால் வடைஎடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.  
திருவண்ணாமலை

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன்

செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திகடன் செலுத்தினா்.

Syndication

செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திகடன் செலுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியா் கோயிலில் 30-ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த ஏழு நாள்களுக்கு முன் கிராமத்தில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பக்தா்கள் காப்புக்கட்டிக்கொண்டு தைப்பூச விழாவுக்கு விரதமிருந்து வந்தனா்.

இந்நிலையில் கோயிலில் தைப்பூச விழாவிவை முன்னிட்டு சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பக்தா்கள் செக் இழுத்தல், உரல் இழுத்தல், காரைமுள் மீது நடந்துசெல்வது, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னா், மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நரசிங்கநல்லூா், தொரப்பாடி கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பிறந்த நாள்: மணிமண்டபத்தில் சிலைக்கு மரியாதை

விக்கிரவாண்டியில் தமிழக ஆளுநருக்கு வரவேற்பு

மயிலம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

SCROLL FOR NEXT