ஆரணியை அடுத்த புதுப்பாளையம் ஸ்ரீசெந்தில் முருகன் மற்றும் வந்தவாசியை அடுத்த மூடூா் ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் ஸ்ரீசெந்தில்முருகன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி,
நவகிரக மகாலக்ஷ்மி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கரஹனம், அங்கூராா்ப்பணம், ஆச்சாா்ய ரக்ஷா பந்தனம், மண்டபாா்ச்சனை, வேதிகாா்ச்சனை, மூல மந்திரஹோமம், எந்திர ஸ்தாபனம், ரத்தின ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், நான்கு கால யாக பூஜைகள், காயத்ரி ஹோமம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று 5 நிலை ராஜகோபுரம், 32 அடி முருகப்பெருமான் மற்றும்
பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள், ஆரணி ஜோதிடா் இரா.குமரேசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
மேலும், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன், அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் ஆா். வேலு மற்றும் கோயில் பெரிய தனக்காரா்கள், நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த மூடூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தையொட்டிகோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கோயில் கோபுரத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், முன்னாள் எம்பி மு.துரை, மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.