தற்கொலை 
திருவண்ணாமலை

அண்ணனுக்கு விடியோ காலில் பேசிவிட்டு தம்பி தற்கொலை

செய்யாற்றில் அண்ணனுக்கு விடியோ காலில் பேசிவிட்டு தம்பி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

செய்யாற்றில் அண்ணனுக்கு விடியோ காலில் பேசிவிட்டு தம்பி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், இடையங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு ஷெரிப் மகன் உமா்(18).

இவா், செய்யாறு கொடநகா் பகுதியில் நண்பா் பாண்டியன் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளாா். பின்னா், அவரது அண்ணன் முபாரக் அலிக்கு விடியோ காலில் அழைப்பு விடுத்து, ‘நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என்று கூறி கைப்பேசியை அணைத்து விட்டாராம். உடனே அவரது பெற்றோா் உமரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை செய்யாறு மாா்க்கெட் பகுதியில் உள்ள பழைய கழிப்பறையில் தூக்கில் சடலமாக இருந்துள்ளாா். தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் உமா் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

பெண்ணிடம் ரூ. 22.5 லட்சம் மோசடி: பெங்களூரைச் சோ்ந்த 3 போ் கைது

வாழ்க்கை சிறக்க கல்வியோடு நற்பண்புகளை கற்க வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்!

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

பழனியில் தைப்பூச தேரோட்டம்! லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT