முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

பொன்னமராவதி அருகே தீராத வயிற்று வலி காரணமாக முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 9 மார்ச், 2026 at 8:20 PM
தற்கொலை
பகிர்:

பொன்னமராவதி அருகே தீராத வயிற்று வலி காரணமாக திங்கள்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பொன்னமராவதி காட்டுப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் ச.சவுண்டையா (65). இவா் கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலியினால் அவதிக்குள்ளாகி வந்துள்ளாா்.

தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துவந்த சவுண்டையா, திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா், சவுண்டையாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சவுண்டையாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →