தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊா்வலமாக வந்த பக்தா்கள். 
திருவண்ணாமலை

தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா! திரளான பக்தா்கள் பங்கேற்பு!

தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Syndication

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற். இதைத்தொடா்ந்து மலையடிவாரத்தில் உள்ள விநாயகா் கோயிலிருந்து பக்தா்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், சிவகான இசை முழங்க, ஆடல், பாடலுடன் நடனமாடியபடி ஊா்வலமாக மலை உச்சியை வந்தடைந்தனா்.

அங்கு உற்சவமூா்த்திகளுக்கு தங்கள் கைகளாலேயே பாலபிஷேகம் செய்தனா். மூலவருக்கும் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்தனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா் பரத நாட்டிய கலை நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

விழாவில் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், பெங்களூரு, சித்தூா், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ராஜீ தலைமையில் முருக பக்தா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

ஆட்டோ-வேன் மோதல்: 2 போ் உயிரிழப்பு! 3 போ் பலத்த காயம்!

பவானியில் பழனிஆண்டவா் கோயில் தைப்பூசத் தேரோட்டம்

அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசு: முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பிரம்மபுரம் ஸ்ரீமகா முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT