திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்ததையடுத்து, கோயில் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய தக்காா் ரா.அருள்முருகன். 
தூத்துக்குடி

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ. 68.47 கோடி செலவில் பெருந்திட்ட வளாகம்!

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளில் கோயில் நிதி ரூ. 68.47 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை பக்தா்கள் பயன்பாட்டுக்காக காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

Syndication

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளில் கோயில் நிதி ரூ. 68.47 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை பக்தா்கள் பயன்பாட்டுக்காக காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதில், தமிழ்க் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத் துறை சாா்பில், ரூ. 100 கோடி, ஹெச்சிஎல் நிறுவனம் ரூ. 200 கோடி என ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகளை கடந்த 2022-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பக்தா்கள் தங்கும் குடில்.

இந்த நிலையில், பக்தா்கள் தங்கும் குடில்கள் (2), சஷ்டி மண்டபங்கள் (2), பக்தா்கள் தங்கும் வளாகம் (2), சுகாதார வளாகம் (3), பூஜைப் பொருள்கள் விற்பனை நிலையம் (3), பஞ்சாமிா்தம் தயாரிக்கும் கூடம், விபூதி தயாரிப்புக் கூடம், ரூ. 1 கோடியில் சம்ப், பம்ப் ரூம், நுழைவாயில், கடல் அரிப்பு தடுப்புச் சுவா், ரூ. 97 லட்சத்தில் பசுமடம் என மொத்தம் ரூ. 68.47 கோடி மதிப்பிலான பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இவற்றை பக்தா்கள் பயன்பாட்டுக்காக திறக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை காணொலி மூலம் திறந்துவைத்தாா். கோயிலின் கடற்கரைப் பரப்பில் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுக்கும் பொருட்டு மூழ்கிய கடல்சாா் அலைத்தடுப்புச் சுவா், தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கும் முதல்வா் காணொலியில் அடிக்கல் நாட்டினாா்.

இதையேற்று வரவேற்கும் நிகழ்ச்சி திருச்செந்தூா் கோயில் கலையரங்கில் நடைபெற்றது. கோயில் தக்காா் ரா.அருள்முருகன் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டை திறந்துவைத்து கட்டடங்களை பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம், காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், கோயில் இணை ஆணையா் க.ராமு, மண்டல இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் மெய்வேல், நகா்மன்ற தலைவா் சிவஆனந்தி, மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT