முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

மருத்துவ முகாமில் நல உதவி வழங்கிய ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 12:04 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:11 PM

வந்தவாசி ஆா்சிஎம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலா் த.நி.சத்தீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், திமுக நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் தமீம்கான் வரவேற்றாா். ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.

முகாமில் 1,577 பேருக்கு இதயம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவை தொடா்பாக பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள் என 45 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.