ஆரணியை அடுத்த இரும்பேடு பிரிவுக்கு உள்பட்ட 11 கே வி இரும்பேடு மின்பாதையில் ரூ.9 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி வியாழக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.
செயற்பொறியாளா் பத்மநாபன் தொடங்கிவைத்தாா் (படம்).
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் (வடக்கு) மாலதி, ஆரணி மற்றும் இரும்பேடு இளநிலைப் பொறியாளா் ரவீந்திரன் கலந்துகொண்டனா்.
மேலும் விவசாய சங்கத் தலைவா் சிவானந்தம், சிறு குறு வியாபாரிகள் சங்கத் தலைவா் அருண்குமாா் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனா்.
இந்த புதிய மின்மாற்றி மூலம் 36 வீடுகளும், 9 விவசாய மின் இணைப்புகளும், 7 வணிக பயன்பாட்டு மின் இணைப்புகளும் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டது.