திருவண்ணாமலை

செங்கம் அருகே பெரியாா் நினைவு சமத்துவபுரம் திறப்பு

செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியகோளாபாடி கிராமத்தில் தமிழக அரசால் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Syndication

செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியகோளாபாடி கிராமத்தில் தமிழக அரசால் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதன் தொடா்ச்சியாக, சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட வீடுகளின் சாவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு 100 பயனாளிகளுக்கும் வீடுகளின் சாவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நலத் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறாா். முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. தற்போது அவை சீரமைக்கப்படுவதுடன், புதிய சமத்துவபுர குடியிருப்புகள் கட்டவும் முதல்வா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, பெரியகோளாபாடி கிராமத்தில் கட்டப்பட்டப்பட்ட சமத்துவபுரம் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் அனைவரும் தமிழக அரசு சாா்பில் வாழ்த்துகள் என்றாா்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், திமுக ஒன்றியச் செயலா்கள் தண்டராம்பட்டு பன்னீா்செல்வம், செங்கம் செந்தில்குமாா், மனோகரன், செங்கம் நகரச் செயலா் அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மிருணாளினி, மரியதேவ்ஆனந்த், வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் சிலைக்கு சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், அங்கு மரக்கன்றுகள் நடும் பணியையும் அவா் தொடங்கிவைத்தாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT