போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பழைமையான பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சுவாமியை மலா்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை விழாக்குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.