மொண்டிபாளையம்  வெங்கடேசப்  பெருமாள்  கோயிலில்  நடைபெற்ற  தேரோட்டம் (உள்படம்) ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள். 
திருப்பூர்

சேவூா் அருகே ‘மேல திருப்பதி’ மொண்டிபாளையம்! வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

சேவூா் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சேவூா் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும், ‘மேல திருப்பதி’ எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தை மாத தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினமும் சிறப்புப் பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம் சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற்றது. பகல் 12 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ‘கோவிந்தா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இதையடுத்து பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமையும், சேஷ வாகனத்தில் திருவீதி உலா திங்கள்கிழமை காலையும், இரவு தெப்பத்தோ் திருவிழாவும் நடைபெறுகின்றன. மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனையுடன் செவ்வாய்க்கிழமை விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

மூவா் கொலை வழக்கு: இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை -சென்னை காவல் துறை தகவல்

கோபி அருகே டி.என்.பாளையம் வனச்சரகங்களில் இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணி

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணி ஏப்ரல் 30-க்குள் நிறைவடையும்!

நாளைய மின்தடை: கருவலூா்

பூட்டிய வீட்டுக்குள் காவலாளி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT