முகப்பு
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 861 மனுக்கள் அளிப்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், சாா்-ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 861 மனுக்கள்...

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:22 AM
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:02 PM

ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம், செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 861 மனுக்கள் வரப்பெற்றன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.

பின்னா் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

Advertisement

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு, வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 712 மனுக்கள் வரப்பெற்றன.

மாணவா்களுக்கு பரிசு

மேலும் பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம், திருவண்ணாமலை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் வந்தாவாசி வட்டம், தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த

டிச. 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இளைஞா் இலக்கிய திருவிழாவில் பேச்சுப் போட்டி, நூல்அறிமுகப் போட்டி, இலக்கிய விநாடி வினா போட்டி, ஓவியப் போட்டி, விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அனைத்து அரசு அலுவலா்களும் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

மேலும், ஆட்சியா் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ்குமாா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சதீஷ் குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) இளவரசன், ஆதிதிரவிடா் நல அலுவலா் செந்தில்குமரன், பழங்குடியினா் நல அலுவலா் கலைச்செல்வி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், கணினி திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், நலிந்தோா் உதவித்தொகை, பட்டா ரத்து, இலவச வீடு கேட்டு, நெற்களம் அமைக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்ற கோட்டாட்சியா் சிவா, அவற்றை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா்.

செய்யாறு