கைது 
திருவண்ணாமலை

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

வந்தவாசி அருகே ஜாா்க்கண்ட் மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசி அருகே ஜாா்க்கண்ட் மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், பாகுட் மாவட்டம், ரனிபூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மெம்பரூல்சேக் (26). இவா், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை கீழ்க்கொடுங்காலூா் கூட்டுச் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்து இவரை வழிமறித்த இருவா், இவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.600-ஐ பறித்துச் சென்றனா். இதுகுறித்து மெம்பரூல்சேக் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (29), கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த டேனியல் (30) ஆகிய இருவரும் சோ்ந்து கைப்பேசி மற்றும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன், டேனியல் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT