முகப்பு
திருவண்ணாமலை

மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 12:04 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:52 PM

வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த சூரியதாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை (50). இவா், மனைவி உமா(45), மகள் சுஜாதா(23), சுஜாதாவின் 3 மாத பெண் குழந்தை ஆகியோருடன் புதன்கிழமை மொபெட்டில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

மருதாடு - ஓசூா் சாலை, மருதாடு புறவழிச் சாலை அருகே சென்றபோது, எதிரே சாலையோரம் சரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக நகா்ந்து வந்து மொபெட் மீது மோதியது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, சுஜாதா ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏழுமலை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். சுஜாதா தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து உமா அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.