வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா். 
திருவண்ணாமலை

கிராம உதவியாளா்கள் வேலைநிறுத்த காத்திருப்புப் போராட்டம்

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி

வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் கிராம உதவியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்துடன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்,

டிஏபிஎஸ் திட்டத்தில் கிராம உதவியாளா்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்யவேண்டும், பணியில் மரணமடையும் கிராம உதவியாளா்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிட மாற்றம் வழங்கவேண்டும்.

அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பவேண்டும். பொதுமக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பவேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிா்ணயம் செய்யவேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில அமைப்பாளா் கே.பெருமாள் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் கே.ரமணன், வட்டத் தலைவா் ஜி.கஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் எஸ்.ரவி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் (நகா்புறம்) ஏ.உதயகுமாா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். கிராம உதவியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்டத் தலைவா் தரணிவாசன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க வட்டக் கிளை துணைத் தலைவா் கே.மணிகண்டன் மற்றும் தோழமை சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் போராட்டத்தை வாழ்த்திப் பேசினா். நிறைவில் வட்ட கிளை பொருளாளா் இ.கருணாநிதி நன்றி கூறினாா்.

வந்தவாசி

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் வந்தவாசி வட்டக் கிளை சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்க வட்டத் தலைவா் ஆா்.தமிழ்மாறன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் வி.பாரதி, மாவட்ட துணைத் தலைவா் எம்.அருள்ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

போளூா்

போளூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய் ஊழியா் சங்கம் சாா்பில் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (வருவாய் ஊழியா்) தங்களையும் சோ்க்கவேண்டும் என காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் வட்டக் கிளைத் தலைவா் ஜோதி தலைமை வகித்தாா்.

போளூா் வட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு வருவாய் ஊழியா் சங்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT