சேலம் மாவட்டம் வாழப்பாடியில், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளா்களுக்கு தமிழக அரசு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளா்களுக்கு, தமிழக அரசு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி,
வாழப்பாடியில்...
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, வாழப்பாடி வட்டத் தலைவா் கௌதம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா். இதில், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனா்.
வட்டச் செயலாளா் முபாரக் உசேன், இணைச் செயலாளா்கள் சிவரத்தினம், பல்லவன் உள்ளிட்ட கிராம உதவியாளா்கள் 30 பேரை வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.