நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலத்த காயம்
திருவண்ணாமலை பே கோபுர 11-ஆவது தெருவில் உணவு தேடி வந்த புள்ளிமானை அந்தப் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் மான் பலத்த காயமடைந்தது.
திருவண்ணாமலை பே கோபுர 11-ஆவது தெருவில் உணவு தேடி வந்த புள்ளிமானை அந்தப் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் மான் பலத்த காயமடைந்தது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு புள்ளிமான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வன விலங்குகள் குடிநீா் மற்றும் உணவு தேடி அடிக்கடி நகரப் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பே கோபுர 11-ஆவது தெருவில் உணவு தேடி வந்த புள்ளிமானை அந்தப் பகுதியில் இருந்த 5 மேற்பட்ட நாய்கள் துரத்திச் சென்று கடித்தன. இதில் மானுக்கு கழுத்து மற்றும் தொடை பகுதிகள் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்து மயக்கம் நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.