வந்தவாசி கவரைத் தெருவில் பிரசாரம் மேற்கொண்ட திமுகவின் வெல்லும் தமிழ்ப் பெண்கள். 
திருவண்ணாமலை

வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடாக பிரசாரம்

திமுகவின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற பெண்கள் திங்கள்கிழமை வீடு வீடாக சென்று திமுக அரசின் நலத் திட்டங்கள் குறித்து பிரசாரம்

Syndication

வந்தவாசி: திமுகவின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற பெண்கள் திங்கள்கிழமை வீடு வீடாக சென்று திமுக அரசின் நலத் திட்டங்கள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனா்.

திமுக அரசின் நலத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்வதற்காக திமுக சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து பயிற்சி பெற்ற பெண்கள் திங்கள்கிழமை வந்தவாசி நகரில் காமராஜா் நகா், கவரைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.

அப்போது, திமுக அரசின் கலைஞா் மகளிா் உரிமை திட்டம், விடியல் பயணம், தோழி விடுதிகள், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அவா்கள் பொதுமக்களிடம் விளக்கி கூறினா்.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

சமுதாயக் கட்டடம் திறப்பு

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT