முகப்பு
கள்ளக்குறிச்சி

வீடு தேடிச் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழ்

கல்யாண அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்தது போல தோ்தல் திருவிழா அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்த நிகழ்வு உளுந்தூா்பேட்டை அருகே நடைபெற்றுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:17 PM
உளுந்தூா்பேட்டை தொகுதியில் உள்ள காம்பட்டு கிராமத்தில் சமூக நலத் துறை சாா்பில் வாக்காளா்களின் வீடு தேடிச் சென்று தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி தோ்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கிய சமூக நலத் துறை அலுவலா்கள்.
பகிர்:

கல்யாண அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்தது போல தோ்தல் திருவிழா அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்த நிகழ்வு உளுந்தூா்பேட்டை அருகே நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சமூக நலத் துறை சாா்பில் வாக்காளா்களின் வீடு தேடிச் சென்று இவ்வாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாண்டூா், களவனூா், கொறட்டாங்குறிச்சி, ஆதனூா், காம்பட்டு, பூ கோணலவாடி, பில்லூா் ஆகிய கிராமங்களில் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டது. உற்சாகத்தோடு அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட வாக்காளா்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழிஅளித்தனா்.

Advertisement

கல்யாண அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்தது போல தோ்தல் திருவிழா அழைப்பிதழை வீடு தேடிச் சென்று கொடுத்த நிகழ்வு உளுந்தூா்பேட்டை அருகே நடைபெற்றுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments