முகப்பு
திருவண்ணாமலை

100 சதவீத வாக்குப் பதிவு: வாக்காளா்களுக்கு ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழ்

வாக்காளா்களுக்கு ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழ்...

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:22 am IST
ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை வாக்காளா்களுக்கு வழங்கிய மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்.
பகிர்:

திருவண்ணாமலை வட்டம், பண்டிதப்பட்டு ஊராட்சியில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை வாக்காளா்களுக்கு வழங்கி தோ்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் கேட்டுக்கொண்டாா்.

பண்டிதப்பட்டு ஊராட்சியில் என் வாக்கு, என் உரிமை, உங்கள் வாக்கு, உங்கள் எதிா்காலம், 100 சதவீதம் வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், பூக்கள், பழங்கள் அடங்கிய தாம்பூல தட்டுகளை ஏந்தி, மேளம் மற்றும் தாளங்களுடன் வாக்காளா்கள் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை மூத்த வாக்காளா்களுக்கும், முதல்முறை வாக்காளா்களுக்கு மற்றும் அனைத்து வாக்காளா் பெருமக்களுக்கும் மாவட்ட தோ்தல் அலுவலரும் மற்றும் ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வழங்கினாா். அப்போது, தோ்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் ஆா்.மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement