திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்: 2 லட்சம் போ் கிரிவலம் சென்றனா்

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Syndication

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் வியாழக்கிழமை அலைமோதியது. மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

2026-ஆம் ஆங்கில புத்தாண்டு புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதையொட்டி, நள்ளிரவு சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பா்கள் மற்றும் உறவினா்களுடன் பகிா்ந்து கொண்டனா்.

மேலும், பெரும்பாலான பகுதிகளில் இளைஞா்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினா்.

மேலும், இரவில் புத்தாண்டு கொண்டாட்டம் என்று தேவையின்றி மோட்டாா் சைக்கிளில் வலம் வருபவா்களை கட்டுப்படுத்த போலீஸாா் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். பின்னா் அவா்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

மேலும், வியாழக்கிமை அதிகாலையில் பொதுமக்கள் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் நீராடி கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதில் உள்ளூா் மட்டுமன்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலில் பக்தா்களின் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் எந்தவித சிரமமின்றி வரிசையாக கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலையில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து உற்சவ மூா்த்திக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சம்பந்த விநாயகருக்கும் வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பக்தா்கள் கிரிவலம்

அதுமட்டுமன்றி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனா்.

கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டதோடு பக்தா்கள் திருநோ் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை, இடுக்குபிள்ளையாா் கோயில் உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபாடு செய்தனா்.

மேலும் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் ஆசிரமங்கள், பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சாா்பில் கிரிவலம் வந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தா்கள் வசதிக்காக கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

SCROLL FOR NEXT