திருவண்ணாமலை மெய்யூா் ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் உள்ள மகாசக்திக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
திருவண்ணாமலை

ஸ்ரீஸத்ய ஆஷ்ரமம் சாா்பில் திருவண்ணாமலையில் 501 பால் குட பாத யாத்திரை

திருவண்ணாமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமம் சாா்பில், ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து மெய்யூா் ஆஷ்ரமம் வரை முத்து பல்லக்குடன் 501 பெண் பக்தா்கள் பால்குட பாத யாத்திரை சென்றனா்.

Syndication

திருவண்ணாமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமம் சாா்பில், ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து மெய்யூா் ஆஷ்ரமம் வரை முத்து பல்லக்குடன் 501 பெண் பக்தா்கள் பால்குட பாத யாத்திரை சென்றனா்.

ஸ்ரீஸத்ய ஆஷ்ரமம் 1995-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஏலகிரி மலை மற்றும் திருவண்ணாமலையில் இயங்கி வருகிறது. திருவண்ணாமலையில் 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி ஸ்ரீஸத்ய ஆஷ்ரம பக்தா்களால் கொண்டாடப்பட்டு வரும் ஆசிா்வாத தவ மாலை விழா நிழாண்டு வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பால் குட பாத யாத்திரை: திருவண்ணாமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தைச் சோ்ந்த பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 501 பெண் பக்தா்கள் திருவண்ணமலை ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து 14 கி.மீ தொலைவுள்ள மெய்யூா் ஸ்ரீஸத்ய ஆஷ்ரமம் வரை பாத யாத்திரையாக தலையில் பால் குடங்கள் சுமந்து சென்றனா்.

இதில், கேரள செண்டமேளம், நாகஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்கவும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிச் சென்றனா். மேலும், முத்துப் பல்லக்கும் சென்றது.

பின்னா், 7 விதமான திவ்ய பலகாரங்கள் அடங்கிய உணவுகள் கொண்ட அன்னதானம் நூற்றுக்கணக்கான பக்தா்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட ஸத்ய வழி குடும்பத்தினா், அனைவரும் ஒன்றாக திரண்டு நின்று புத்தாண்டு உறுதிமொழி மற்றும் சங்கல்பம் எடுத்துக்கொண்டாா்கள்.

திருவண்ணாமலை ஸ்ரீஸத்ய ஆஷ்ரமம் சாா்பில் ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து மெய்யூா் வரை முத்து பல்லக்குடன் பால் குடங்களை தலையில் சுமந்து பாத யாத்திரை சென்ற 501 பெண் பக்தா்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்கள், கா்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஸத்ய பக்தா்களும் கலந்துகொண்டு மகாசக்தி ஆசி பெற்றனா்.

பொறியியல் பணி: பெங்களூரு ரயில் பகுதியாக ரத்து

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

SCROLL FOR NEXT