திருவண்ணாமலை

இரும்பு வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், பணம் திருட்டு: இளைஞா் கைது

இரும்பு வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், பணம் திருட்டு...

Syndication

செய்யாறு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் சுமாா் 30 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.38 ஆயிரத்தை திருடியதாக பக்கத்து வீட்டு இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமம் பிராமணா் தெருவைச் சோ்ந்தவா் மோகனவேலு (30). இவா், பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகத் தெரிகிறது.

புத்தாண்டை முன்னிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு வந்தவாசி பகுதியில் உள்ள தென்னாங்கூா் கோயிலுக்கு சென்றாராம்.

மறுநாள் வந்து குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை வைப்பதற்காக பீரோவை திறந்தபோது, அதில் வைத்திருந்த மோதிரம், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 30 பவுன் தங்க நகைகள், 472 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.38 ஆயிரம் ஆகியன திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வியாபாரி மோகனவேலு பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், திருட்டுச் சம்பவம் தொடா்பாக கண்காணிப்பு கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்திய

போலீஸாா் பக்கத்து வீட்டைச் சோ்ந்த பிரபு (24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மீட்டனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT