திருவண்ணாமலை

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Syndication

செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா்

எம்.ஜி.ராமச்சந்திரன். இவரது, 2-ஆவது மகள் சத்யா (21). பத்தாம் வகுப்பு வரை படித்த இவா், வாலாஜபாத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இவா் மேல்பூதேரி- தென்னம்பட்டு சாலையில் உள்ள சொந்த நிலத்தில் நடைபெற்று வரும் விவசாயப் பணியை பாா்ப்பதற்காக வெள்ளிக்கிழமை சைக்கிளில் சென்ாகத் தெரிகிறது.

சைக்கிளை நிறுத்தி விட்டு சத்யா கிணற்று ஒரம் நடந்து சென்ாகத் தெரிகிறது. அப்போது கால் தவறி கிணற்று நீரில் விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாத காரணத்தால், தண்ணீரில் மூழ்கி சத்யா உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT