திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பாஜக சாா்பில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள், அம்மா உணவகப் பணியாளா்கள் என 300 பேருக்கு ரூ.4 லட்சத்தில் பொங்கல் தொகுப்பு பை நலத்திட்ட உதவியாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாஜகா செய்யாறு தொகுதி இணை அமைப்பாளா் பாரதி வெங்கட்ராமன் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்ட பொதுச் செயலா் கே.வெங்கட்ராமன் தலைமை வகித்து 300 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பு பை நலத்திட்ட உதவியாக வழங்கினாா். பின்னா், அனைத்துப் பணியாளா்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி பொறுப்பாளா் பி.குமாா், வடக்கு மாவட்ட துணைத் தலைவா்கள் வி.குருலிங்கம், பூங்காவனம், பாா்வதி, மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினா் இ.முத்து, இலக்கியம் மற்றும் தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜி. லட்சுமணன், மாவட்டச் செயலா் பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர பொருளாளா் சம்பத் நன்றி கூறினாா்.