திருவண்ணாமலை

போளூா் பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

போளூா் பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது மற்றும் திருத்தேரை செப்பனிடுவது தொடா்பாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனா்.

Syndication

போளூா் பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது மற்றும் திருத்தேரை செப்பனிடுவது தொடா்பாக இந்துசமயஅறநிலையத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுசெய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சம்பத்கிரி மலைமீது சுயம்பு லட்சுமிநரசிம்மா் கோவில் அமைந்துள்ளது. இதன் மலை அடிவாரத்தில் சன்னதிதெருவில் உள்ள கோவிலில், உற்சவா் சிலையுடன் ஸ்ரீலட்சுமிநரசிம்மரும்,மூலவராக வேணுகோபாலசுவாமியும் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோவிலின் மரத்தோ் பழுதடைந்து உள்ளது. இதனால் கடந்த சிலவருடங்களாக பிரமோற்சவத்தின்போது தேருக்குபதிலாக தெரு வடைச்சான் மீது சுவாமியை அலங்கரித்து வைத்து தேரை இழுத்துவந்தனா்.மேலும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 25ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது இதனால் இந்த பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில் இந்துசமயஅறநிலையத்துறைசோ்ந்த திருவண்ணாமலை மாவட்ட இணை ஆணையா்அ.இரா.பிரகாஷ்,உதவி ஆணையா் கோ.சண்முகசுந்தரம்,செயற்பொறியாளா் ஆா்.சங்கா் ஆகியோா் ஆய்வுசெய்தனா்.செயல் அலுவலா் மு.சிலம்பரசன்,தக்காா் கோ.பழனிசாமி,ஆய்வாளா் உ.சத்தியா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT