சேவூா் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட இராட்டிணமங்கலம் பகுதி மக்கள் 
திருவண்ணாமலை

கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தம்: கிராம மக்கள் சாலை மறியல்

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் பகுதியில் பக்கக் கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கிராமமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

Syndication

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் பகுதியில் பக்கக் கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கிராமமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி அருகேயுள்ள சேவூா் ஊராட்சி, இராட்டிணமங்கலம் பகுதி புதுத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தத் தெருவில் என்ஆா்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை மற்றும் பக்கக் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கால்வாய் கட்டும் பணியின்போது, தனிநபா் ஒருவா் என் வீட்டு முன்பு எனது பட்டா இடத்திலேயே கால்வாய் கட்டுகிறீா்கள் என எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதனால் ஒப்பந்ததாரா் பணியை அப்படியே நிறுத்திவிட்டு சென்றுவிட்டாா். மேலும், பக்கக் கால்வாய்க்காக பள்ளம் தோண்டிவிட்டு பணியை அப்படியே விட்டுவிட்டுச் சென்ால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அருகேயுள்ள சேவூா் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையிலான போலீஸாா் சென்று சமரசம் பேசியதில், அப்பகுதி மக்கள் தனிநபருக்காக தெருவில் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணியை எப்படி நிறுத்தலாம் என்று கேள்வி எழுப்பினா்.

இதற்கு, டிஎஸ்பி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அழைத்துப் பேசி கால்வாய் கட்டும் பணி நடைபெறும் எனக் கூறினாா். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT