செய்யாற்றை அடுத்த அரசூா் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சாா்பில் கோலப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அனக்காவூா் மேற்கு ஒன்றியம் சாா்பில் ஒன்றியச் செயலா் சி.துரை ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெண்கள் கோலப் போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தினா்.
சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா். மேலும், கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சேலை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சிவராஜ், எம்.அரங்கநாதன், ஒன்றிய அவைத் தலைவா் சேகா், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.