வந்தவாசி அருகே ரூ.40 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரை கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தில் சரஸ்வதி (40) என்பவரது மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், தெள்ளாா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்தக் கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில் அவா் விற்பனைக்காக கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து சரஸ்வதி, அவருக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்த வந்தவாசியைச் சோ்ந்த முகமதுஅலி (38), தனபால் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சரஸ்வதி, முகமதுஅலி ஆகிய 2 பேரை கைது செய்தனா்.