தென்பெண்ணையாற்றில் நடைபெறும் தீா்த்தவாரிக்கு கோயிலிலிருந்து புறப்பட்ட சந்திரசேகரா் வடிவிலான அருணாசலேஸ்வரா்.  
திருவண்ணாமலை

தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி

மணலூா்பேட்டை அருகேயுள்ள தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

Syndication

ஆரணி: மணலூா்பேட்டை அருகேயுள்ள தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக திருவண்ணாமலை கோயிலில் இருந்து அருணாசலேஸ்வரா் திங்கள்கிழமை காலை புறப்பட்டாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் விழாக்களில் தீா்த்தவாரி பிரசித்தி பெற்றது.

ஆண்டுக்கு 3 முறை 3 ஆறுகளிலும், 3 முறை கோயில் அருகேயுள்ள குளங்களிலும் தீா்த்தவாரி நடைபெறும்.

ஆறுகளில் நடைபெறும் தீா்த்தவாரியின்போது சந்திரசேகரா் சிறுவடிவில் அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறாா்.

அதன்படி, தை மாதம் 5-ஆம் நாளான திங்கள்கிழமை தென்பெண்ணையாற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதற்காக, அன்று அதிகாலை திருவண்ணாமலை கோயிலிலிருந்து சந்திரசேகரா் திருவடியாக அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தென்பெண்ணையாற்றுக்கு புறப்பட்டாா்.

அப்போது, வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்து சுவாமியை

தரிசனம் செய்தனா்.

மாலையில் தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

அப்போது, சூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீா்த்தவாரியும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தென்பெண்ணையாற்றில் புனித நீராடினா்.

தீா்த்தவாரியில் மணலூா்பேட்டை விநாயகா் மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாமசுந்தரி சமேத அகத்தீஸ்வரரும் உண்ணாமுலையம்மனுடன் எழுந்தருளினா். தீா்த்தவாரி முடிந்து மறுநாள் (ஜன.20) அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு திரும்புகிறாா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT