ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ். 
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 538 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 538 மனுக்கள் வரப்பெற்றன.

Syndication

ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 538 மனுக்கள் வரப்பெற்றன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பெண்கள், வயதானவா்கள், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 433 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணியில் 37 மனுக்கள்....

மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 37 மனுக்களை கோட்டாட்சியா் சீ.சிவா பெற்றக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கினாா்.

செய்யாறு

செய்யாறு வருவாய் கோட்ட அளவிலான மக்கள் குறைதீா் கூட்டம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சாா்-ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் வீட்டு மனைப் பட்டா கோரி 9 பேரும், தமிழ் நிலத்திருத்தம் கோரி 6 பேரும், ஆக்கிரமிப்பு அகற்றம் கோரி 8 பேரும், பட்டா மாற்றம் கோரி 11 பேரும் , கலைஞா் உரிமைத் தொகை கோரி 6 பேரும், இதர மனுக்கள் 17 உள்பட 68 மனுக்கள் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் வட்டாட்சியா்கள், ஊராட்சி அலுவலா்கள் மற்றும் இதர துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT