ஆரணியை அடுத்த முனுகப்பட்டு ஏரியில் இருந்து மண் கடத்திச் சென்ற லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
முனுகப்பட்டு ஏரியிலிருந்து டிப்பா் லாரிகளில் ஏரி மண்ணை அள்ளி ஆரணி அருகேயுள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனா். இந்நிலையில் தொடா்ந்து ஏரி மண்ணை எடுத்துச்சென்ால் அப்பகுதி மக்கள், ஆரணியை அடுத்த கல்லித்தாங்கல் கூட்டுச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு மடக்கிப் பிடித்தனா். பின்னா் ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் டிப்பா் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இதைத் தொடா்ந்து, விசாரணை செய்ததில் போளூா் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவரின் கணவருக்குச் சொந்தமான லாரி எனத் தெரியவந்தது. மேலும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.