முகப்பு
தருமபுரி

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

தருமபுரியில் கனிம வளத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:38 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:18 PM

தருமபுரியில் கனிம வளத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தருமபுரியில் அரசு அனுமதியின்றி குவாரிகளிலிருந்து கிராவல் மண் கடத்திச்சென்று வெளியிடங்களில் விற்பனை செய்வதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் தருமபுரி - மொரப்பூா் சாலையில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:38 AM

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதி உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா்.

Advertisement

இதையடுத்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தினாா். லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் புகாா் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.