அமைச்சா் எ.வ.வேலுவிடம் சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை வழங்கிய அகில இந்திய டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி.  
திருவண்ணாமலை

சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேக விழா: அமைச்சா் எ.வ.வேலுவுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருமாறு அமைச்சா் எ.வ.வேலுவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருமாறு அமைச்சா் எ.வ.வேலுவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

சென்னசமுத்திரம் கிராமத்தில் கிருஷ்ணா் கோயில் புதிதாக கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் டிவிஸ் நிறுவனா் தலைவா் வேணுசீனுவாசன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பின்னா் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்ால் மீண்டும் வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்கள் பக்தா்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள், அமைச்சா், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அகில இந்திய டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலுவை, திருவண்ணாமலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கும்பாபிஷேக விழா அழைப்பிதழை வழங்கி விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா்.

பின்னா், திமுக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் கம்பனுக்கும் அழைப்பிதழ் வழங்கினாா்.

காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT