முகப்பு
திருவண்ணாமலை

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

Updated On : 22 ஜனவரி, 2026 at 6:52 AM
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 6:36 PM

வந்தவாசி அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த இந்திரா நகரில் ஆரிப்பாஷா (35) என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், பொன்னூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்தக் கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில் அவா் விற்பனைக்காக கடையில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.230 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்த பொன்னூா் போலீஸாா் ஆரிப்பாஷாவை கைது செய்தனா்.