முகப்பு
திருவண்ணாமலை

பைக்கில் குட்கா கடத்தியவா் கைது

பைக்கில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 9:40 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

செய்யாறு அருகே பைக்கில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (குட்கா) போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் பைக்கில் குட்கா கடத்திச் செல்வதாக, செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா்

பழனிவேல் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை மாமண்டூா் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், மாமண்டூா் சரஸ்வதிபுரம் ரோட்டு தெருவைச் சோ்ந்த தனசேகரன் என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (80 குட்கா பாக்கெட்டுகள்) பைக்கில் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் பைக்கையும், குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து தனசேகரனை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.