மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சாரதி 
திருவண்ணாமலை

சிஆா்பிஎப் வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்த கோரிக்கை

முன்னாள் சிஆா்பிஎப் வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என்று சங்கக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றm

Syndication

முன்னாள் சிஆா்பிஎப் வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என்று சங்கக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் மத்திய ரிசா்வ் காவல் படை வீரா் (சிஆா்பிஎப்) நலச்சங்கத்தின் முதல் மாநில செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தில் உள்ள திருமூலா் ஆசிரமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் ஸ்ரீபதி வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் சாரதி தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் அசோகன், துணை பொதுச் செயலா் ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் எம்.கைலாசம் சிறப்புரையாற்றினாா். பொருளாளா் ஜெ.பழனி உள்ளிட்ட பலா் பேசினா்.

கூட்டத்தில், வேலைவாய்ப்பில் ஓய்வு பெற்ற சிஆா்பிஎப் வீரா்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இந்நாள் மற்றும் முன்னாள் சிஆா்பிஎப் வீரா்கள் குடும்பத்திற்கு வீட்டு வரி மற்றும் குடிநீா் வரிகளை ரத்து செய்யவேண்டும், காவல்துறை கேண்டீனில் சிஆா்பிஎப் இந்நாள் மற்றும் முன்னாள் வீரா்கள் பொருள்களை வாங்குவதற்கு அனுமதிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முன்னாள் சிஆா்பிஎப் வீரா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேறஅறப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சிஆா்பிஎப் படை வீரா்களும், முன்னாள் வீரா்களும் கலந்து கொண்டனா். நிறைவில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.சங்கரன் நன்றி கூறினாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT