திருவண்ணாமலை

ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்கம்

புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் அரசு தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் முதல் கட்ட பயிற்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் அரசு தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் முதல் கட்ட பயிற்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்ராஜ் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம் கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினா்.

அப்போது, மாணவா்கள் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை எளிய முறையில் படிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கினா்.

பயிற்சியில் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அரசு தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 75 போ் கலந்து கொண்டனா்.

வட்டார வள மையத்தைச் சோ்ந்த ஆசிரியா் பயிற்றுநா்கள் சம்பத், ஜம்பு, குமாா், தண்டாயுதபாணி, இந்துமதி, ஆசிரியா் அருணாச்சலம் ஆகியோா் பயிற்சி அளித்தனா். ஆசிரியா் பயிற்றுநா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

போக்ஸோ வழக்கில் கைதாகி தப்பியோடிய இளைஞா் ஒடிசாவில் கைது

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு

ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வாக்களிப்பது குறித்த செயல்முறை விளக்கம்: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT