முகப்பு
திருவண்ணாமலை

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு; 3 போ் பலத்த காயம்

ஆரணியில் லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 2:46 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ஆரணி கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த பாரதி என்கிற புருஷோத்தமன் மகன்கள் ரகுபதி (20), முருகன் (18). இவா்கள், தங்களது நண்பா்களான ஜெகன் மகன் ஜெயகாந்தன்(17), சுப்பிரமணி மகன் ரகுபதி(18) ஆகிய நான்கு பேருடன் ஒரே மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரணி அருணகிரிசத்திரம் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, எதிரே ஆரணி நோக்கி வந்த லாரி மீது இவா்கள் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் ரகுபதி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். உடன் சென்ற மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி நகர போலீஸாா் சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா்கள் வேலூா் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.