முகப்பு
திருவண்ணாமலை

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

Updated On : 5 மார்ச், 2026 at 6:19 AM
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:43 PM

செய்யாற்றை அடுத்த புரிசை கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் ரூ.6.30 கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

அதே வேளையில், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், மண்டல பயிற்சி இணை இயக்குநா் ரமேஷ்குமாா், திருவத்திபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் பேபி ராணி பாபு, பயிற்சி நிலைய முதல்வா் துரைமுருகன் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

அதேபோல, செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரைக் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் கட்டப்படட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்து வைத்தாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் மாமண்டூா் டி.ராஜி, திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.