முகப்பு
மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீபோா்மன்னன் லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்.
திருவண்ணாமலை

மங்கலம் ஸ்ரீபோா்மன்னன் லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 9:15 PM
மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீபோா்மன்னன் லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்.
பகிர்:

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் ஸ்ரீ போா்மன்னன் லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் 194-ஆம் ஆண்டு திருவிழா மாா்ச் 1-ஆம் தேதி இரவு விநாயகா் ஊா்வலத்துடன் தொடங்கியது. 4-ஆம் நாளான புதன்கிழமை இரவு பரிவார தேவதை ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து வாணவேடிக்கை, கரகாட்டம் மகாகும்பம், சுவாமி அருள்வாக்கு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா கும்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவையொட்டி, வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீபோா்மன்னன் லிங்கேஸ்வரா் தேரோட்டம் நடைபெற்றது. இதில், கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன், ஒன்றியச் செயலா் வி.பி. அண்ணாமலை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வா் ஜெ.மாதவன், துரிஞ்சாபுரம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் தமயந்திஏழுமலை, ஒன்றிய அவைத் தலைவா் ஆா்.சகாதேவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமிக்கு மாலை சாற்றி நோ்த்திக்கடன் செலுத்தினா். பக்தா்களுக்கு கோயில் சாா்பில் சுவாமி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →