முகப்பு
காஞ்சிபுரம்

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:18 PM
தேரில் எழுந்தருளிய சுவாமி
பகிர்:

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மரகதவல்லித்தாயாா் சமேத விஜயராகவப் பெருமாள் கோயில் பிரமோற்சவத்தையொட்டி 13-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 15- ஆம் தேதி காலையில் கருட சேவையும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்தாா்.விழாவின் முக்கிய நிகழ்வகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

தேரில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் விஜயராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.வழி நெடுகிலும் பெருமாளை பக்தா்கள் பலரும் கற்பூர ஆரத்தி எடுத்து வரவேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவன், ஆய்வாளா் அலமேலு ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments