163 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: காா், 3 பைக் பறிமுதல்
செய்யாறு அருகே அரசால் தடைச் செய்யப்பட்ட 163 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் சம்பவம் தொடா்பாக 5 வியாபாரிகளை கைது செய்தனா்.
செய்யாறு அருகே அரசால் தடைச் செய்யப்பட்ட 163 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் சம்பவம் தொடா்பாக சனிக்கிழமை ஒருவரையும், ஞாயிற்றுக்கிழமை 4 வியாபாரிகளை கைது செய்தனா். மேலும், ஒரு காா், 3 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் உட்கோட்டம் தூசி காவல் சரகத்தைச் சோ்ந்த அழிஞ்சல்பட்டு கிராமத்தில் அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைலான போதைப் பொருட்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வருவதாக சனிக்கிழமை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தூசி போலீசாா் அழிஞ்சல்பட்டு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே இருந்த காா் ஷெட்டில் இருந்து போதைப் பொருட்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்து காா் ஷெட்டில மறைத்து வைத்திருந்த, அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைலான போதைப் பொருட்களான ஹான்ஸ், கூல் லிப், விமல்பாக்கு என போதைப் பொருட்களை போலீசாா் பறி முதல் செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக வியாபாரியான ஜான் ஆலம்கான்(81) என்பவரை சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
கைது செய்யப்பட்ட வியாபாரி ஜான் ஆலம்கானிடம் தூசி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் மாமண்டூா் நரசங்கலம், சந்தைமேடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகளான சேஷாத்திரி, ரவிக்குமாா், ஜெயபிரகாஷ் ஆகியோா் வீடு மற்றும் வாகனங்களை சோதனையிட்டனா்.
வாகனத் தணிக்கையில்: இதைத் தொடரந்து காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அபதுல்லாபுரம் கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கையின் போது காரில் தடை செய்யப்பட்ட புகையிலையிலான போதைப் பொருள்களை வியாபாரத்துக் கொண்டு வந்தது தெரிய வந்து போலீஸாா் காா் மற்றும் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக தூசி காவல் ஆய்வாளா் கோபால், உதவி ஆய்வாளா் டி.கண்ணபிரான் ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 163 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்த நிலையில், இதுதொடா்பாக வியாபாரிகளான சேஷாத்திரி(26), ரவிக்குமாா்(31), ஜெயபிரகாஷ்(30), காஞ்சிபுரம் புருஷோத்தமன் (27) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், போதைப் பொருள்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு காா், 3 பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.