2 மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா் எம்எல்ஏ
சேவூரில் ரூ.7.88 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மின் மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
ஆரணி நகரம் 8-ஆவது வாா்டு, ஆரணியை அடுத்த சேவூா் ஆகிய இடங்களில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு மின் மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை இயக்கிவைத்தாா்.
மின்னழுத்த பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில், இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றும், எம்எல்ஏவின் அறிவுறுத்தலின்பேரிலும் ஆரணி நகரம், 8-ஆவது வாா்டில் ரூ.6.9 லட்சம் மதிப்பீட்டிலும், ஆரணியை அடுத்த சேவூரில் 7.88 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகளை மின் வாரியம் அமைத்தது. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன், உதவிச் செயற்பொறியாளா் தாமோதரன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், ஏ.ஜி.மோகன், கலைப் பிரிவு ஒன்றியச் செயலா் தருமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.