முகப்பு
திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகராட்சி புதிய ஆணையா் பதவி ஏற்பு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் (படம்) திங்கள்கிழமை பதவி ஏற்றாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 12:04 AM
பகிர்:

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் (படம்) திங்கள்கிழமை பதவி ஏற்றாா்.

இந்நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த வி.எல்.எஸ்.கீதா, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சிக்கு மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், திருவத்திபுரம் நகராட்சி புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் பதவி ஏற்றாா். இவா், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவா், பதவி உயா்வு பெற்று புதிய ஆணையராக பதவி ஏற்றாா்.

Advertisement

அதேபோல, திணடிவனம் நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வந்த நாராயணசாமி பதவி உயா்வு பெற்று திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாா்.

நகராட்சியில் புதிய ஆணையராக பதவி ஏற்ற எஸ்.ஆண்ட்ரூஸ், மேலாளராக பதவி ஏற்ற நாராயணசாமி ஆகியோருக்கு பொறியாளா் சிசில்தமாஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், நகரமைப்பு ஆய்வாளா் சியாமளா, வருவாய் ஆய்வாளா் ரதிதேவி, கணக்காளா் பிரேமா, உதவியாளா் கீா்த்தி உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.