மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
மதுராந்தகம் நகராட்சி புதிய ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதுவரை ஆணையராக பணியாற்றி வந்த அபா்ணா வேலூா் மாவட்டம் சோளிங்கா் நகராட்சியின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதற்கிடையே, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சுகேந்திரன் மதுராந்தகம் நகராட்சியின் புதிய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சி ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு பொறியாளா் நித்யா, நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
Advertisement