போடி நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்
போடி நகராட்சி ஆணையா் நாகா்கோவில் மாநகராட்சி உதவி ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
போடி நகராட்சி ஆணையா் நாகா்கோவில் மாநகராட்சி உதவி ஆணையராக சனிக்கிழமை பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சி ஆணையராக கே.சுதா பணிபுரிந்து வந்தாா். இவா் மீது புகாா் தெரிவித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
இந்த நிலையில், நகராட்சி ஆணையா் கே.சுதாவை நாகா்கோவில் மாநகராட்சி உதவி ஆணையராக பணியிட மாறுதல் செய்து சென்னை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் உத்தரவிட்டாா்.