தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பேரணி
தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பேரணி...
தூத்துக்குடி மாநகராட்சி, ஜேசிஐ பியா்ல்சிட்டி குயின்பீஸ், புனித மரியன்னை கல்லூரி உண்ணத் பாரத் அபியான் திட்டத்தினா் இணைந்து 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை தூத்துக்குடி திரேஸ்புரம் முன்பிருந்து, மாநகராட்சி உதவி ஆணையா் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தாா்.
பேரணி, கடற்கரை சாலை வழியாக வந்து முத்து நகா் கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.